திருச்சி:மணப்பாறை கருப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட செவக்காட்டூரைச் சேர்ந்த ஐஸ் வியாபாரி சீனிவாசன் என்பவர் நேற்று முன்தினம் (டிச. 14) மாலை உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கு நேற்று (டிச.15) மாலை நடைபெற்றது.
அப்போது இடுகாட்டிற்குச் செல்லும் வழியில் உள்ள கருப்பூர் பெரியகுளத்துப் பகுதியில் கழுத்தளவில் நீர் தேங்கியிருந்தது. அதில், சடலத்துடன் கடந்து சென்றுள்ளனர். அந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.