தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் ‘பீஸ்ட்’ - திரையரங்கில் குவிந்த ரசிகர்கள் - பீஸ்ட் விமர்சனம்

திருச்சியில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தைக் காண ஏராளமான விஜய் ரசிகர்கள் காலை 3 மணி முதல் திரையங்கில் காத்திருந்துள்ளனர்.

திரையரங்கில் குவிந்த ரசிகர்கள்
திரையரங்கில் குவிந்த ரசிகர்கள்

By

Published : Apr 13, 2022, 3:00 PM IST

திருச்சி:நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் திருச்சி மாவட்டத்தில் 12 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இன்று (ஏப்.13) காலை 4 மணிக்கு ரசிகர்களின் காட்சி முதல் காட்சியாக வெளியிடப்பட்டது.

இதனையடுத்து இரண்டாவது காட்சி 7 மணிக்கு ரசிகர்கள் காட்சியாக அதன் பின்பு பொதுமக்கள் முன்பதிவு செய்த டிக்கெட்களுக்கான காட்சிகள் திரையிடப்படுகின்றன.

திரையரங்கில் குவிந்த ரசிகர்கள்

முன்னதாக இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள சோனா மீனா எல்.ஏ சினிமாஸில் விஜய் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என அரங்கை அதிர வைத்தனர்.

இளம் பெண்களும்- இளைஞர்களும் இணைந்து ஆட்டமாடி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை காண திரையரங்கிற்கு சென்றனர். இத்திரைப்படத்தைக் காண அதிகாலை 3 மணிமுதலே ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து வரிசையில் நின்றனர்.

இதையும் படிங்க:பீஸ்ட் பாருங்க... பெட்ரோல் வாங்கீக்கோங்க... ரசிகர்கள் ஏற்பாடு

ABOUT THE AUTHOR

...view details