தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'CAA-விற்கு எதிராகக் கூடிய 50 ஆயிரம் பேர்' - திருச்சியைத் திணறடித்த சிறுத்தைகள் - trichy Viduthalai Chiruthaigal Katchi rally

திருச்சி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

rally
rally

By

Published : Feb 23, 2020, 10:35 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று (சனிக்கிழமை) 'தேசம் காப்போம் பேரணி' திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஆர்எம்எஸ் காலனியிலிருந்து தொடங்கிய இப்பேரணி, எடமலைப்பட்டி புதூர் வழியாக கிராப்பட்டி வந்தடைந்தது. பேரணியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டு மத்திய அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிஏஏ-விற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

திருச்சியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேரணி

சுமார் 50 ஆயிரம் பேர் இப்பேரணியில் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து கிராப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிறப்புரையாற்றினார்.

இதையும் படிங்க:முஸ்லீம்களை தனிமை படுத்த விடமாட்டோம்- திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details