திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேவுள்ள பொன்சங்கிப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாகச் சிலர் கிராவல் மண் எடுப்பதாக வருவாய்த் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, வட்டாட்சியர் லஜபதிராஜ் தலைமையிலான வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்றனர்.
அங்கு, அவர்களிடம் விசாரித்தபோது அனுமதியின்றி மண் அள்ளியது உறுதியானது. இதையடுத்து, மண் அள்ளுவதற்குப் பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரி, ஜேசிபி இயந்திரத்தைப் பறிமுதல்செய்தனர். இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் இயந்திரங்களை மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.