திருச்சியின் பிரதான சந்தையான காந்தி மார்க்கெட் மணிகண்டம் அருகே புதிதாக கட்டப்பட்ட காய்கனி வணிக வளாகத்திற்கு இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அங்கு மொத்த விற்பனையாளர்களுக்கு என்று கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் சில்லறை வியாபாரம் தொடர்ந்து காந்தி சந்தையிலேயே நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்திருந்தது.
இது தொடர்பாக நீதிமன்ற மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடந்ததோடு, கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட காந்தி சந்தையை திறக்க தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. அதுபோல திருச்சி மாநகரில் தற்காலிகமாக செயல்படும் அனைத்தும் தொடர்ந்து செயல்பட நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் காந்தி சந்தையை மீண்டும் திறக்க வலியுறுத்தி நாளை (24ஆம்) முதல் காய்கறி விற்பனை நடைபெறாது என்று காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் மக்களுக்கு காய்கறி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் என்ற நிலை உருவாகும்.