கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை மஞ்சம்பட்டி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு கடந்த நான்கு நாள்களாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச் செல்லும்படி மாவட்ட அலுவலர்கள் கடைகளுக்கு முன் சதுரங்கள் வரைந்துள்ளனர்.