திருச்சி:மணப்பாறை அடுத்த வீரப்பூரில் நடைபெற்று வரும் பொன்னர் – சங்கர் மன்னர்களின் மாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான வேடபரி நிகழ்ச்சி, வீரப்பூர் பெரிய காண்டியம்மன் ஆலயத்தின் திடலில் நேற்று (பிப்.27) வெகு விமரிசையாக நடைபெற்றது.
சாம்புகன் முரசு கொட்டிக் கொண்டே முன்னே செல்ல அதனைத் தொடர்ந்து, வீரப்பூர் ஜமீன்தார் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் பட்டையத்தாரர்கள் செல்ல பட்டியூர் கிராமங்களின் இளைஞர்கள் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் கோயிலுக்குள் ஓடி சென்று குதிரை வாகனத்தில் பொன்னரையும், யானை வாகனத்தில் பெரியகாண்டியம்மனையும் பின்னால் கொண்டு வந்தனர்.