இட ஒதுக்கீட்டில் தொடர்ந்து அநீதி விளைவிக்கும் மத்திய அரசை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் மத்திய அரசு தொடர்ந்து அநீதி இழைத்துவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. இதற்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
இட ஒதுக்கீட்டில் மத்திய அரசு அநீதி விளைவிப்பதாக விசிக ஆர்ப்பாட்டம்! - VCK protested against central govt in Trichy
திருச்சி: மத்திய அரசு இட ஒதுக்கீட்டில் தொடர்ந்து அநீதி விளைவிப்பதாக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விசிக ஆர்ப்பாட்டம்
இந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சி ரயில்வே ஜங்சன் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைச் செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.