தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுஜித்தின் பெற்றோருக்கு திருமாவளவன் ஆறுதல்! - சுர்ஜித்தின் பெற்றோரை சந்தித்த திருமாவளவன்

திருச்சி: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தின் பெற்றோரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Thirumavalavan

By

Published : Oct 27, 2019, 5:57 PM IST

Updated : Oct 28, 2019, 8:13 AM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் இரண்டு வயது குழந்தை சுஜித் தவறி விழுந்த சம்பவம் அனைத்து தரப்பினரையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. சுஜித்தின் தலையைச் சுற்றிமண் விழுந்துள்ளதால் மீட்பு பணியில் சிக்கல் நிலவுகிறது. தொடர்ந்து 48 மணிநேரத்திற்கும் மேலாக குழந்தையை மீட்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

இதனிடையே குழந்தையின் பெற்றோரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பியுமான திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மீட்புப் பணி குறித்து அரசு அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

மீட்பு பணி குறித்து கேட்டறிந்தபோது

மீட்பு பணி நடைபெறும் இடத்தில் கடுமையான பாறைகள் இருப்பதால் சாதாரண போர்வெல் இயந்திரம் மூலம் துளைபோட முடியவில்லை. அதனால் மீண்டும் ரிக் இயந்திரம் மூலம் புதிய குழி தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

Last Updated : Oct 28, 2019, 8:13 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details