தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரியாணி வழங்கிய விசிகவினர் வழக்குப் பதிவு - Trichy district News

திருச்சி: ஊரடங்கு உத்தரவை மீறி கொடியேற்றிய விசிகவினர் 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

VCK party files case against 10 for violating restraining order
VCK party files case against 10 for violating restraining order

By

Published : Aug 18, 2020, 3:51 AM IST

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 58ஆவது பிறந்தநாள் விழா, கட்சி நிர்வாகிகள் சார்பில் திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் முத்தழகன் கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார்.

மேலும் நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் சத்தியசீலன், மாவட்ட பொறுப்பாளர் மதனகோபால் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு பிரியாணி பொட்டலங்களை வழங்கினர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காலத்தில் தடையை மீறி கூட்டமாக ஒன்று கூடியது, காவல்துறை அனுமதியில்லாமல் கொடி ஏற்றியது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் 10 பேர் மீது மணப்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details