திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தேசம் காப்போம் பேரணி நடைபெற்றது. இப்பேரணியின் முடிவில் நடந்த கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கையை கைவிட வேண்டும், தேசிய குடியுரிமை பதிவேடு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இட ஒதுக்கீடு உரிமை பாதுகாத்திட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனைதொடர்ந்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன்,
தேசம் காப்போம் பேரணியில் உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் " நாங்கள் முஸ்லீம்கள் இல்லை. இருப்பினும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கு காரணம், நாங்கள் ஜனநாயக சக்திகள். இந்து மத கொள்கை மீது மிகுந்த பற்று கொண்ட காந்தியையே கோட்சே சுட்டுக் கொன்றான் என்றால் ஆர்எஸ்எஸ்சை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆர்எஸ்எஸ்சிற்கு பல அணிகள் உண்டு. அதில் ஒரு அரசியல் அணிதான் பிஜேபி. சங் பரிவாரின் வெறுப்பு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது தான். தாழ்த்தப்பட்டவர்கள் நீதிபதிகள் ஆனது யாரும் போட்ட பிச்சை அல்ல. அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டமே அதற்கு காரணம். முஸ்லீம்களை தனிமைப்படுத்த நாங்கள் விடமாட்டோம்" எனக் கூறினார்.
இதையும் பார்க்க: பாஜகவின் பாவச்செயல்களுக்கு அதிமுக பலியாக நேரிடும் - திருமா எச்சரிக்கை