தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 3, 2020, 5:09 PM IST

ETV Bharat / state

காந்தி மார்க்கெட்டை உடனே திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

திருச்சி: காந்தி மார்க்கெட்டை உடனே திறக்க வலியுறுத்தி விசிக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காந்தி மார்க்கெட்டை உடனே திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
காந்தி மார்க்கெட்டை உடனே திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட்டிலுள்ள காய்கறி கடைகள் மூடப்பட்டு, தற்காலிகமாக 10 இடங்களில் மாற்றி அமைக்கப்பட்டது.

ஆனால், தற்போது காந்தி மார்க்கெட்டை திறக்கக் கோரி பல்வேறு கட்சியினர், அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பான வழக்கும் மதுரை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், திருச்சி காந்தி மார்க்கெட்டை உடனே திறக்க வலியுறுத்தி விசிக, சிஐடியு, தொமுச, சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று (நவ. 03) திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களையும், வியாபாரிகளையும் வஞ்சிக்கும் வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காந்தி மார்கெட்டை தாரைவார்க்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் பிரபாகரன், சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், திமுக தொழிற்சங்க நிர்வாகி ராமலிங்கம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 10%ஆக போனஸ் குறைப்பு: போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details