தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீரங்கம் வசந்த உற்சவத்தில் உப நாச்சியார்களுடன் எழுந்தருளிய நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று (மே.19) நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் புறப்பாடாக வசந்த மண்டத்தில் எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் வசந்த உற்சவத்தில் உப நாச்சியார்களுடன் எழுந்தருளிய நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் வசந்த உற்சவத்தில் உப நாச்சியார்களுடன் எழுந்தருளிய நம்பெருமாள்

By

Published : May 20, 2021, 7:46 AM IST

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில் வசந்த உற்சவ புறப்பாடு நேற்று (மே.19) தொடங்கியது. இதை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபத்தை 5.45 மணிக்கு வந்தடைந்தார்.

ஸ்ரீரங்கம் வசந்த உற்சவத்தில் உப நாச்சியார்களுடன் எழுந்தருளிய நம்பெருமாள்

அங்கு அலங்காரம் அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளி இரவு 7.15 மணிக்கு புறப்பாடாகி 7.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். வரும் 26ஆம் தேதி வரை வசந்த உற்சவ புறப்பாடு நடைபெறுகிறது.

7ஆம் திருநாளான 23ஆம் தேதி நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பாடாகி, நெல்லளவு கண்டருளி மாலை 6 மணிக்கு வசந்த மண்டபத்தை சென்றடைவார்.

9ஆம் திருநாளான 26ஆம் தேதி திருமஞ்சனம் கண்டருளல், படிப்பு கண்டருளி மூலஸ்தானம் சேருதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஊரடங்கு காரணமாக வசந்த உற்சவத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதையும் படிங்க : 'ஆத்தா வந்துட்டா..' கரோனாவின் ஆட்சிக்கு மத்தியில் கரோனா தேவியின் ஆசி

ABOUT THE AUTHOR

...view details