தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுர்ஜித்திற்காக தர்காவில் தொழுகையில் ஈடுபட்டுவரும் இஸ்லாமியர்கள்! - save for surjith

நாகூர்: திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை உயிருடன் மீட்க நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை மேற்கொண்டுவருகின்றனர்.

save for surjith

By

Published : Oct 26, 2019, 3:30 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுர்ஜித் 17 மணி நேரமாக சிக்கித்தவித்து வருகிறது. இந்நிலையில் குழந்தையை மீட்கும் முயற்சியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

குழந்தை சுர்ஜித்தை உயிரோடு மீட்க உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். பெரியாண்டவர் சன்னதியில் நடைபெற்ற தொழுகையில் குழந்தை எந்த பாதிப்பின்றி உயிருடன் மீண்டு வரவும், கயிறு கட்டி சிறுவனை தூக்கும் மீட்புப் படையினரின் முயற்சி தோல்வி அடையக் கூடாது என்பதற்காகவும் தொழுகை செய்தனர். தொழுகையில் 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

நாகூர் தர்காவில் சுர்ஜித்திற்காக தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

இந்நிலையில் கிணற்றில் விழுந்தபோது, 30 அடியிலிருந்த குழந்தை மீட்புப் பணியின்போது 68, 70, 80 என கீழே சென்றுவிட்டதால் மீட்பதில் மிகுந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details