வன வேங்கைகள் கட்சி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மராட்டிய இன நக்கலே என்ற மக்களுக்கு மத்திய, மாநில அரசிதழில் மற்றும் எம்பிசி பட்டியலில் நரிக் குறவர்கள் என்ற வார்த்தையை சூட்டியுள்ளனர். அந்தப் பெயரை திருத்தம் செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நரிக்குறவர் என்ற பெயர் திருத்தம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்! - Protest in trichy collector office
திருச்சி: மராட்டிய இன நக்கலே மக்களுக்கு நரிக்குறவர் என்று பெயர் வைத்துள்ளதைத் திருத்தம் செய்ய வலியுறுத்தி வனவேங்கைகள் கட்சி சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
protest
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அரசிதழில் விரைவில் பெயர் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் தமிழ் தேசிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.