தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்னி வேன் விபத்து: இரண்டு பேர் உயிரிழப்பு - விபத்து செய்திகள்

திருச்சி : முசிறி அருகே ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்ததில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி அருகே வேன் மரத்தில் மோதித் தீப்பற்றி விபத்து
திருச்சி அருகே வேன் மரத்தில் மோதித் தீப்பற்றி விபத்து

By

Published : Feb 7, 2020, 5:06 PM IST

ஈரோடு மாவட்டம் கொளப்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி. இவர் தனது மனைவி லோகநாயகி, மகன் யுவதீஷ், மாமனார் ஆறுமுகம், மாமியார் செல்லம்மாள், உறவினர் விஸ்வநாதன் ஆகியோருடன் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு சென்றுள்ளார். கோயில் வழிபாடுகளை முடித்துவிட்டு மீண்டும் இன்று அதிகாலை திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள திருஈங்கோய்மலை என்ற இடத்தில் காரில் இவர்கள் அனைவரும் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநர் மணிகண்டனின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன், சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து மரத்தில் மோதியது.

திருச்சி அருகே வேன் மரத்தில் மோதித் தீப்பற்றி விபத்து

வேன் மரத்தில் மோதியதைத் தொடர்ந்து ஆம்னி வேனில் தீப்பற்றியதில் ஓட்டுநர் மணிகண்டன், மயில்சாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆம்னி வேனில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மற்ற ஐந்து பேரையும் அவ்வழியே சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையும் படிங்க: மதுபோதையில் காரை இயக்கி விபத்து - சி.சி.டி.வி காணொலி வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details