தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைகுண்ட ஏகாதசி திருவிழா..! திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா விமரிசை..! - trichy srirangam temple recent news

vaikunta ekadasi 2023: திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதன் கோயிலில், இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் நடும் விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா
திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 8:49 PM IST

திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா

திருச்சி: கீதாசார்யனின் அமுதமொழியான "மாதங்களில் நான் மார்கழி" என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் தான் இந்து சமுகத்தை சேர்ந்த மக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படும். மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி இரண்டு அசுரர்களை அடிப்படிடையாக கொண்டு தோன்றியது என புராணங்களிள் கூறப்பட்டுள்ளது.

அந்த நாட்களில் பெருமாளுக்காக விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்கள் கிடைக்கும் என்றும், முடிவில் வைகுண்ட பதவியையும் பெறுவார்கள் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது. அதன்படி மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக பெருமாள் கோயில்களில் வடக்குதிசையில் இருக்கும் கதவுகள் மூடப்பட்டிருக்கும், அவை வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டுமே திறக்கும். அதை "சொர்க்க வாயில்" என்று பக்தர்கள் அழைப்பார்கள். அந்த வகையில் வைகுண்ட ஏகாதசி தினத்திற்கு, முன்னிரவில் பக்தர்கள் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி, விடியகாலையயில் சொர்க்க வாயில் வழியாக சென்று பெருமாளை வழிபடுவார்கள்.

அந்த வகையில் 108 வைணவ தளங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா முகூர்த்தக்கால் (பந்தக்கால்) நடும் வைபவம் இன்று (அக்.25) விமர்சையாக நடைபெற்றது.

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் ஆயிரங்கால் மண்டபத்தில், சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் முகூர்த்தக்கால் நடப்பட்டது. பின்னர் இது குறித்து ஸ்ரீரங்கம் கோயிலின் தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், "வரும் டிசம்பர் 12ஆம் தேதி திருநெடுந் தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது, 13ஆம் தேதி பகல்பத்து விழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து பகல்பத்து விழாவின் பத்தாம் திருநாளான மோகினி அலங்காரம்ம் நடைபெற உள்ளது.

பின்னர், 22ஆம் தேதி இராபத்து திருவிழாவின் தொடங்க உள்ளது, முதல் நாளான வைகுண்ட ஏகாதசி எனப்படும் பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகிற 2024ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி காலை நம்மாழ்வார் மோட்சத்துடன் இனிதே நிறைவடைகிறது" என்று தெரிவித்தார்.

குறிப்பாக திருச்சி ஸ்ரீரங்கம் சொர்க்க வாசல் திறப்பு விழாவில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பசும்பொன் தேவரின் தங்கக் கவசம் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

ABOUT THE AUTHOR

...view details