திருச்சி:பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்புவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். டிசம்பர் 22ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி பகல்பத்து, ராப்பத்து என்று 21 நாட்கள் விழா நடைபெறும்.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல்பத்து உற்சவத்தின் 3ஆம் திருநாளான இன்று (டிசம்பர் 25) சுக்கிரனுக்கு அதிபதியான நம்பெருமாள்(உற்சவர்) மூலஸ்தானத்திலிருந்து "சென்னியோங்கு" 7ஆம் பாசுரம், "மார்கழி திங்கள்" பாசுரத்திற்கேற்ப நம்பெருமாள் சாய்வு சவுரி கொண்டை அணிந்து, ரத்தின அபயஹஸ்தம், ரத்தினகிளி, பவள மாலை, முத்துச்சரம் மற்றும் பஞ்சாயுத மாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடியபடி மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளினார்.