தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைகுண்ட ஏகாதேசி  - சவுரி கொண்டே அலங்காரத்தில் நம்பெருமாள் - trichy district news

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி விழாவை முன்னிட்டு பகல்பத்து 2 ஆம் நாளான இன்று சவுரி கொண்டே அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தார்.

வைகுண்ட ஏகாதேசி
வைகுண்ட ஏகாதேசி

By

Published : Dec 5, 2021, 9:39 AM IST

திருச்சி :ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்க வாசல் திறப்பு விழா வருகின்ற 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது. திருநெடுந்தாண்டகத்துடன் இவ்விழா கடந்த 3ஆம் தேதி தொடங்கியது.

பகல் பத்து வைபோகத்தின் முதல் நாளான (04.12.2021) நேற்று உற்சவர் நம்பெருமாள் கவரிமான் தொப்பாரைக் கொண்டை, தங்க கிளியுடன் இரத்தின அபயஹஸ்தம், கலிங்கதுரா, பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, புஜ கீர்த்தி,, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

பகல் பத்து 2ஆம் நாளான இன்று (05.12.2021) நம்பெருமாள் சவுரிக் கொண்டை, வைர அபயஹஸ்தம் , வைரகாதுகாப்பு, தங்க கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, தங்க பஞ்ஜாயுத மாலை, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.

வைகுண்ட ஏகாதேசி

பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க : மகாகவி பாரதிக்கு சிலை: துணைநிலை ஆளுநர் தமிழிசை தகவல்!

ABOUT THE AUTHOR

...view details