தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீரங்கம் பகல்பத்து 8ஆம் நாள்: முத்து கிரீடம் அலங்காரத்தில் நம்பெருமாள் - srirangam temple

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பகல்பத்து எட்டாம் நாளான இன்று (டிசம்பர் 11) முத்து கிரீடம் அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தார்.

ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்

By

Published : Dec 11, 2021, 9:12 AM IST

திருச்சி:ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சொர்க்க வாசல் திறப்பு விழா வருகின்ற 14ஆம் தேதி நடைபெறுகிறது. திருநெடுந்தாண்டகத்துடன் இவ்விழா கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. ஏகாதசி விழாவை முன்னிட்டு பகல்பத்து எட்டாம் நாளான இன்று (டிசம்பர் 11) முத்து கிரீடம் அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தார்.

பகல்பத்து வைபோகத்தின் முதல் நாள் (டிசம்பர் 4)

உற்சவர் நம்பெருமாள் கவரிமான் தொப்பாரைக் கொண்டை, தங்க கிளியுடன் ரத்தின அபயஹஸ்தம், கலிங்கதுரா, பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, புஜ கீர்த்தி, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதித்தார்.

பகல் பத்து இரண்டாம் நாள்(டிசம்பர் 5)

நம்பெருமாள் சவுரிக் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைரகாதுகாப்பு, தங்கக் கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, தங்க பஞ்ஜாயுத மாலை, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார்.

பகல் பத்து மூன்றாம் நாள்(டிசம்பர் 6)

நம்பெருமாள் அலங்கார கொண்டை அணிந்து, காசு மாலை, திருமார்பில் அழகிய மணவாளன் பதக்கம், மகாலட்சுமி பதக்கம், வைர அபயஹஸ்தம், முத்துச்சரம், வைர ஒட்டியானம், ரத்தின திருவடி அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி எழுந்தருளினார்.

பகல் பத்து நான்காம் நாள்(டிசம்பர் 7)

நம்பெருமாள் தொப்பாரைக் கொண்டை, ரத்தின அபயஹஸ்தம், வைரகாதுகாப்பு, முத்துச்சரம், காசு மாலை அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு எழுந்தருளினார்.

பகல் பத்து ஐந்தாம் நாள்(டிசம்பர் 8)

நம்பெருமாள் ரத்தின பாண்டியன் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைரகைக்காப்பு, விமான பதக்கம், நெல்லிக்காய் மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார்.

பகல் பத்து ஆறாம் நாள்(டிசம்பர் 9)

நம்பெருமாள் நீள்முடிகிரீடம், ரத்தின அபயஹஸ்தம், லட்சுமி பதக்கம், முத்துச்சரம், காசு மாலை அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார்.

பகல் பத்து ஏழாம் நாள்(டிசம்பர் 10)

நம்பெருமாள் முத்துசாய்வு கொண்டை, கபாய் சட்டை, வைர அபயஹஸ்தம், அடுக்கு பதக்கம், முத்துச்சரம் அலங்காரத்தில் எழுந்தருளினார்.

பகல் பத்து எட்டாம் நாள் (டிசம்பர் 11)

நம்பெருமாள் முத்து கிரீடம், ரத்தின அபயஹஸ்தம், அடுக்கு பதக்கம், ரத்தின மகர ஹண்டிகை, முத்துச்சரம், அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார்.

பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்செய்தனர்.

இதையும் படிங்க:பகல்பத்து 7ஆம் நாள்: முத்துசாய்வு கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

ABOUT THE AUTHOR

...view details