தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பகல்பத்து 2ஆம் நாள்: முத்து சாய் கொண்டையுடன் எழுந்தருளிய ஸ்ரீரங்க நம்பெருமாள்

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் நம்பெருமாள், முத்து சாய் கொண்டையுடன் எழுந்தருளினார்.

vaikunada ekadasi second day festival in trichy srirangam ranganathar temple
vaikunada ekadasi second day festival in trichy srirangam ranganathar temple

By

Published : Dec 16, 2020, 10:26 AM IST

திருச்சி:108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலமாக நேற்று (டிச. 15) தொடங்கியது. பகல் பத்து வைபவத்தின் இரண்டாம் நாளான இன்று நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார்.

முத்து சாய் கொண்டை, வைர அபயஹஸ்தம், தங்கக் கிளி, பவளமாலை, பஞ்சாயுத பதக்கம் அலங்காரத்தில் புறப்பட்ட நம்பெருமாள் 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் அங்கு நம்பெருமாள் மாலைவரை பக்தர்களுக்குச் சேவை சாதித்து அருளுகிறார்.

முத்து சாய் கொண்டையுடன் நம்பெருமாள்

தொடர்ந்து, இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார். பகல்பத்து இரண்டாம் நாள் நிகழ்வில் உற்சவர் நம்பெருமாளை நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்செய்தனர்.

மேலும் மூலவர் ரங்கநாதர் பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்துவருகிறார்.

இதையும் படிங்க:ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து நிகழ்ச்சியுடன் தொடங்கிய வைகுண்ட ஏகாதசி

ABOUT THE AUTHOR

...view details