தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிசிடிவிக்கே டேக்கா கொடுத்த  திருடர்கள் - காவல்துறையினர் வலை - money .theft

திருச்சி: லால்குடி அருகே உரக்கடை கடையின் சிசிடிவியை திருப்பிவிட்டு ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொல்லையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை  காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சிசிடிவிக்கே டேக்கா கொடுத்த  திருடர்கள்

By

Published : Aug 2, 2019, 3:26 AM IST

திருச்சியைச் சேர்ந்த ஜான்பீட்டர் என்பவர் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சகாயம் ஏஜென்சி என்ற பெயரில் பூச்சி மருந்து, விதை, உரம் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் புதன்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து மாறு நாள் (வியாழக்கிழமை) காலை கடையை திறக்க வந்தபோது, ஜன்னல் கம்பிகளை அறுத்து கடைக்குள் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள், ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொல்லையடித்தது தெரியவந்தது.

சிசிடிவிக்கே டேக்கா கொடுத்த திருடர்கள் - காவல்துறையினர் வலைவீச்சு

இதுகுறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கடையின் சிசிடிவியை ஆய்வு செய்தபோது, கேமிராவை திருப்பிவிட்டு முகத்தை முழுவதும் துணியால் மறைத்துக் பணத்தை கொல்லையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல ஏற்கனவே 2 முறை இந்த கடையில் திருட்டு சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details