தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓட்டு கேட்க வேண்டிய அவசியமே இல்லை - உறையூரில் உதயநிதி பேச்சு

திருச்சியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய உதயநிதி, "உங்களிடம் ஓட்டு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அனைத்து திமுக வேட்பாளர்களையும் வெற்றிபெறச் செய்வீர்கள். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி உறுதி என்றாலும், அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்" என்றார்.

திருச்சி உறையூரில் உதயநிதி பிரச்சாரம்
உங்களிடம் ஓட்டு கேட்க வேண்டிய அவசியமே இல்லை, உங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கேட்கிறேன் - திருச்சி உறையூரில் உதயநிதி பிரச்சாரம்

By

Published : Feb 10, 2022, 9:58 AM IST

திருச்சி: உறையூர் பகுதியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை செய்தார்.

அப்போது பேசிய அவர், "திருச்சியில் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், முதன்மைச் செயலாளர் கே.என். நேருவை வெற்றிபெறச் செய்ததால், அவரிடம் நகர்ப்புற நிர்வாகத் துறை ஒப்படைக்கப்பட்டு, உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்படுகிறது.

நீங்கள் முடிவு எடுத்துவிட்டால்

உங்களிடம் ஓட்டு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அனைத்து திமுக வேட்பாளர்களையும் வெற்றிபெறச் செய்வீர்கள். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது கரோனா பாதிப்பு இரண்டாவது அலை தீவிரமாக இருந்தது. மூன்று மாதம் கரோனாவோடு போராடுவதாகவே இருந்தது.

திருச்சி உறையூரில் உதயநிதி பரப்புரை

அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒன்பது கோடி தடுப்பூசி போட்டதோடு, கரோனா பொதுமுடக்கக் கால நிவாரணம் இரண்டு தவணைகளாக 4,000 ஆயிரம் ரூபாய், நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. திமுக ஆட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.

கருணாநிதியின் பேரனாகக் கேட்கிறேன்

திமுக அரசு சொல்வதைச் செய்யும்; செய்வதைத்தான் சொல்லும். இந்த உள்ளாட்சித் தேர்தலில் 50 விழுக்காடு தாய்மார்கள் போட்டியிடுகிறீர்கள். நீங்கள் முடிவு எடுத்துவிட்டால், யாராலும் மாற்ற முடியாது.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி உறுதி என்றாலும், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். அதற்கு, திமுகவினர் பொறுப்பேற்று, தீவிரமாகச் செயல்பட வேண்டும். உங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கேட்கிறேன், ஸ்டாலின் மகனாகக் கேட்கிறேன், கருணாநிதியின் பேரனாகக் கேட்கிறேன்" என்றார்.

திருச்சி உறையூரில் உதயநிதி

கழகத்தின் கோட்டையாம் மலைக்கோட்டை மாநகரில்

இதனிடையே உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் மேற்கொண்ட பரப்புரை குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "ஸ்டாலின் தலைமையிலான கழக அரசு அமைந்த எட்டு மாதத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சமூகநீதித் திட்டங்களை வாக்காளர்களிடம் எடுத்துக்கூறினால் போதும் உள்ளாட்சியில் 100 விழுக்காடு வெற்றி உறுதி என திருச்சி மரக்கடை பகுதியில் திரண்டிருந்த கழகத்தினர்-பொதுமக்களிடம் உரையாற்றினேன்.

திருச்சி உறையூரில் உதயநிதி

கழகத்தின் கோட்டையாம் மலைக்கோட்டை மாநகரில் உள்ளாட்சியில் உதயசூரியனின் வெற்றியை உறுதிசெய்ய தேர்தல் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளுங்கள், கழகத்தின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டுசேருங்கள் என உறையூர் பகுதியில் கூடியிருந்த கழகத்தினரிடம் கேட்டுக்கொண்டேன்.

திருப்புமுனை மாநாடுகள் பல கண்ட திருச்சி

கழகத்தின் திருப்புமுனை மாநாடுகள் பல கண்ட திருச்சியின் அனைத்து வார்டுகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என மண்ணச்சநல்லூரில் திரண்டிருந்த பொதுமக்களிடம் உதயசூரியன் & கூட்டணி கட்சிகளின் சின்னங்களுக்கு வாக்குச் சேகரித்தேன்.

திருச்சி, பெட்டவாய்த்தலையில் பெருந்திரளாகக் கூடியிருந்த கழகத்தினர்-பொதுமக்களிடம், 'நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சட்டப்பேரவைத் தேர்தல் அளித்த வெற்றியைவிட மிகப்பெரிய வெற்றியைத் தாருங்கள்' என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தேன்.

திருச்சி உறையூரில் உதயநிதி

இந்நல்லாட்சி உள்ளாட்சியிலும் தொடர

பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், இல்லம் தேடி கல்வி, நம்மை காக்கும் 48... என கழக அரசின் மக்கள் நலத்திட்டங்களைப் பட்டியலிட்டு, இந்நல்லாட்சி உள்ளாட்சியிலும் தொடர மதச்சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என திருச்சி காட்டூரில் வாக்கு சேகரித்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மக்களவையில் மத்திய அமைச்சருக்கும் திமுக எம்.பி.க்கும் வாக்குவாதம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details