தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் ஊரடங்கு மீறல்: 300 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி: ஊரடங்கு உத்தரவை மீறிய 300 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 250க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

two wheeler bike
two wheeler bike

By

Published : Mar 30, 2020, 5:10 PM IST

இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர், தீவிர ரோந்து பணியிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ரோந்து வரும் காவலர்கள் தேவையின்றி யாரும் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தியும் வருகின்றனர்.

வெளியே செல்லும் மக்களை கட்டுப்படுத்த ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து சாலைகள் முடக்கப்பட்டுள்ளன. ஆனால், இதையும் மீறி பலர் இருசக்கர வாகனங்களில் தேவையின்றி வீதிகளில் உலா வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளான காய்கறி, பால், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க வருபவர்களை காவல் துறையினர் விசாரித்து அனுப்புகின்றனர்.

இருப்பினும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் உலா வந்தது. இதையடுத்து, காவல்துறையினர் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்கின்றனர். அந்த வகையில், திருச்சி மாநகரில் 300 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் இன்று பறிமுதல் செய்தனர். அதுமட்டுமல்லாமல், ஊரடங்கு உத்தரவை மீறியது, ஹெல்மெட் அணியாமல் வந்தது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறியதாக 250க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

காவல்துறை பறிமுதல் செய்த இருசக்கர வாகனங்கள்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருச்சி கே.கே. நகரில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த வாகனங்கள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவு நிறைவடைந்த பின்னர் வழங்கப்படுமா? அல்லது நீதிமன்றம் மூலம் வாகனத்தை பெற வேண்டுமா? என்பது பின்னர்தான் தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு அரசிடம் உதவி கோரும் வடமாநில தொழிலாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details