தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லோடு வேன் மீது கார் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு - two person died in car collision with lorry at trichy

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லோடு வேன் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

லோடு வேன் மீது கார் மோதி விபத்து
லோடு வேன் மீது கார் மோதி விபத்து

By

Published : Dec 27, 2021, 12:14 PM IST

திருச்சி: மணப்பாறை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு (டிசம்பர் 26) கோழி பண்ணைக்கு ரஸ்க்தூள் ஏற்றி லோடு வேன் ஒன்று சென்றது. திடீரென டயர் வெடித்ததில் சாலையோரமாக வேனை ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். அப்போது அவ்வழியே திண்டுக்கல் நோக்கிச் சென்ற கார் எதிர்பாராத விதமாக லோடு வேனின் பின்புறத்தில் மோதியது.

இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த வையம்பட்டி காவல் துறையினர், வாகன ஓட்டிகளின் உதவியோடு விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மணப்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், விபத்தில் இறந்தவர்கள் பெரியகுளத்தைச் சேர்ந்த அன்னக்கொடி மாயன், முகமது அஸ்லாம் என்பதும் படுகாயமடைந்தவர்கள் நசுருதீன், வேல்முருகன், இராதாகிருஷ்ணன் ஆகியோர் என தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தனியார் சிற்றுந்து மோதி இருவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details