திருச்சி: புத்தாந்தம் தெற்கு இடையப்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி பீட்டர் (55). இவர் டெய்லர் வேலை செய்து வந்தார். இதே ஊரை சேர்ந்த புலோமின்தாஸ் (18). இவர் பன்னாங்கொம்பு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இருவரும் அந்தோணி பீட்டருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் உடையாப்பட்டி கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சிவகங்கையிலிருந்து - பெங்களூருக்கு நூல் கோன் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி சமத்துவபுரம் என்ற இடத்தில் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த அந்தோணி பீட்டர், புலோமின்தாஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.