தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாய்க்கால் நீரில் மூழ்கிய குழந்தைகள், தேடுதல் பணி தீவிரம்! - வாய்க்கால் நீரில் மூழ்கிய குழந்தைகள் பலி

திருச்சி: வாய்க்கால் நீரில் மூழ்கிய இரண்டு குழந்தைகளை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

வாய்க்கால் நீரில் மூழ்கிய குழந்தைகள், தேடுதல் பணி தீவிரம்
வாய்க்கால் நீரில் மூழ்கிய குழந்தைகள், தேடுதல் பணி தீவிரம்

By

Published : Oct 9, 2020, 2:25 AM IST

திருச்சி மாவட்டம் சமயபுரம் பெருவளை வாய்க்கால் பாலம் அருகே வசித்து வருபவர் ரவிசந்திரன்.

இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு நரேஷ் (4) என்ற மகனும் தர்ஷினி (6) என்ற மகளும் இருந்தனர்.

மாலை இரு குழந்தைகளும் இயற்கை உபாதைகளை கழிக்க பெருவளை வாய்க்கால் கரையோரத்திற்கு சென்றனர்.

வாய்க்காலில் முழு அளவில் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது. இந்நிலையில், கரையில் இருந்த இரு குழந்தைகளும் வாய்க்காலுக்குள் தவறி விழுந்து வாய்காலின் நீரில் மூழ்கினர்.

தகவல் அறிந்து அருகில் இருந்த இளைஞர்கள் வாய்க்காலில் குதித்து குழந்தைகளை தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து தகவலறிந்த சமயபுரம் தீயணைப்பு படை வீர்ரர்கள் இரு குழந்தைகளையும் தேடிவருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் வாய்க்கால் நீரில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க...நீரில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details