திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள பழையக்கோட்டையை அடுத்த பெரியகுளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் தோமாஸ் விவசாயி. இவர் தனது வீட்டில் ஜல்லிக்கட்டு காளை, பசுமாடுகள் ஆகியவற்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில், இவரது பசு மாடு ஒன்று, ஒரே பிரசவத்தில் 2 கன்று குட்டிகளை ஈன்றது. இதனை கண்ட தோமாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஒரு பிரவசத்தில் இரண்டு கன்றுகள்; ஆச்சரியத்தில் விவசாயிகள்! - பசு மாடு
திருச்சி: மணப்பாறை அருகே உள்ள பழையக்கோட்டையில் ஒரே பிரசவத்தில் இரண்டு கன்று குட்டிகளை பசு மாடு ஈன்றதால், அப்பகுதி விவசாயிகள் ஆச்சரியம் அடைந்தனர்.
ஒரு பிரவசத்தில் இரண்டு கன்றுகள்; ஆச்சரியத்தில் மக்கள்
இதுகுறித்து தோமாஸ் குடும்பத்தினர் கூறுகையில், பசுக்களின் இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் காளைகளின் எண்ணிக்கை குறைந்த காரணத்தால் பசுக்கள் ஊசி மூலம் கருவுற்று வருவதாகவும், இதனால் பசுக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என்றும் கூறினார். மேலும் தற்போது இரண்டு கன்று குட்டிகளை ஈன்ற பசு பாரம்பரிய முறைப்படி, காளையுடன் இணை சேர்த்ததால் தான் என்றார்.