திருச்சி: திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் சாகுல் அமீது மற்றும் ஷர்புதீன் என்ற இருவர் தடை செய்யப்பட்ட அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் முகநூல் பக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர்கள் லைக் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் இவர்கள் வீட்டில் சோதனை நடத்தியது.
இந்த நிலையில் தடை செய்யப்பட்ட அமைப்புடன் ஏற்கெனவே தொடர்பில் இருந்ததாக கூறப்படும் இனாம்குளத்தூரைச் சேர்ந்த சாகுல் அமீது மற்றும் ஷர்புதீன் ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அறிவுறுத்தலின் படி, திருச்சி மாவட்ட ஜீயபுரம் டிஎஸ்பி பாரதிதாசன், ராம்ஜி நகர் காவல் ஆய்வாளர் வீரமணி, சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் உதயகுமார், ஜீயபுரம் காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் தலைமையில் 30 போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.