தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுஜித் பெற்றோர்களுக்கு டிடிவி தினகரன் ஆறுதல்! - சுஜித் வீட்டிற்கு சென்ற டிடிவி

திருச்சி: மணப்பாறை அருகேயுள்ள சுஜித் இல்லத்திற்குச் சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சுஜித்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர்.

dinakaran

By

Published : Nov 3, 2019, 2:41 PM IST

திருச்சி மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நாடே அஞ்சலி செலுத்தி வருகிறது.

இந்நிலையில், சுஜித் இல்லத்திற்குச் சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அங்கிருந்த சுஜித் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுஜித்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.

சுஜித் பெற்றோர்களுக்கு டிடிவி தினகரன் ஆறுதல்

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "குழந்தையை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற மட்டுமே வந்தேன். இதில் அரசியல் பேச விரும்பவில்லை. ஊடகம் வாயிலாக அனைவருமே பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

தீபாவளியையும் மறந்து அந்த குழந்தைப் பிழைக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர். சமூக வலைத் தளத்தில் அனைத்து வகையான கருத்துகள் வந்தாலும் உண்மை என்ன என்பது மக்களுக்குத் தெரியும்" என்றார்.

டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு

மேலும் அமமுக சார்பில் சுஜித்தின் பெற்றோர்களுக்கு எந்தவொரு நிதியும் அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்

இதையும் படிங்க: 'விஷ வண்டு கடித்து உயிரிழந்த புதுவை அதிமுக செயலாளர்' - முதலமைச்சர் பழனிசாமி நேரில் அஞ்சலி

ABOUT THE AUTHOR

...view details