திருச்சி:தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம் பெற வேண்டும் என திருச்சி மாவட்டத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழக அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் மிக முக்கிய பிரபலமாக இருப்பவர், விஜயகாந்த். இவர் கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு, தைராய்டு பிரச்னை ஏற்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ பரிசோதனைக்காக கடந்த நவ.18-ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த நவம்பர் 29ஆம் தேதி மியாட் மருத்துவமனை நிர்வாகம், விஜயகாந்த் உடல்நிலை சீரான நிலையில் இல்லை எனக் கூறி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இதனை அறிந்த திரைப் பிரபலங்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். விஜயகாந்த் தமிழ் சினிமாவில் பங்காற்றிய பிறகு, தமிழக அரசியலுக்கு வந்து தேமுதிக என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம்; சசிகலா நீக்கத்தை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பு!