திருச்சி மாவட்டம் முசுறி அருகே வசித்து வருபவர் பிரசாந்த். (27). இவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக காவல் நிலைய மாடியில் பிரசாந்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, யாரும் கவனிக்காத நேரத்தில் மாடியில் இருந்து பிரசாந்த் குதித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்ட காவல்துறையினர், முதலுதவி சிகிச்சைக்காக அப்பகுதியில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்னர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்த் உயிரிழந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு முசிறி தாலுகாவில் சிறுமி ஒருவரைத் திருமணம் செய்த பிரசாந்திற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அச்சிறுமியுடன் திருப்பூரில் பிரசாத் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பிரசாத்தை போக்சோவில் கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். விசாரணையின் போது திடீரென காவல் நிலையத்தின் மாடியில் இருந்து குதித்த பிரசாத் உயிரிழந்தார்.
தகவலறிந்த மத்திய மண்டல காவல் துணைத் தலைவர் ஆனி விஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) செந்தில்குமார் ஆகியோர் ஜெம்பு நாதபுரம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:கணவரை வழியனுப்ப போலி டிக்கெட்: இளம் பெண் கைது!