திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்திலுள்ள ரங்கநாதர் ஆலயம் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்தின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது.
இந்நிகழ்வை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாளுக்கு நீள்முடி கிரீடம், வைர அபயஹஸ்தம், பவள மாலை, சூரிய பதக்கம் ஆகிய அணிகலன்கள் அணிவிக்கப்பட்டது. காலை 7 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட உற்சவர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.