தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Srirangam Temple Collapse: ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுர சுவர் இடிந்து விபத்து! - Srirangam Ranganathaswamy Temple

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்கு கோபுரம் முதல் நிலையில் உள்ள சுவர் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இடிந்து விழுந்த ஶ்ரீரங்கம் கோயில் கோபுர சுவர்
இடிந்து விழுந்த ஶ்ரீரங்கம் கோயில் கோபுர சுவர்

By

Published : Aug 5, 2023, 10:22 AM IST

ஸ்ரீரங்கம் கோயில் கோபுர சுவர் இடிந்து விபத்து

திருச்சி: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனவும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஶ்ரீரங்கம் கோயிலுக்கு திருச்சி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் குடும்பத்துடன் பக்தர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். ஶ்ரீரங்கம் கோயிலில் தினசரி திருவிழா வைபவம் நடைபெற்று வருகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் 21 கோபுரங்கள் உள்ளன. இதில் கிழக்கு வாசலில் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை மற்றும் 2 வது நிலை சுவர்கள், சில தினங்களுக்கு முன் விரிசல் ஏற்பட்டு இருந்தன. இதுகுறித்து விசாரித்த போது, கோயில் நிர்வாகம் சார்பாக பராமரிப்பு பணிக்காக ஏற்கனவே இதற்கு டெண்டர் விடப்பட்டதாக தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:மாநிலம் முழுவதும் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: உள்துறை செயலாளர் அமுதா அதிரடி!

இந்த நிலையில் தற்போது விரிசல் அதிகமானதைத் தொடர்ந்து முதல் நிலை கோபுரத்தின் சுவர் நள்ளிரவில் மளமளவென சரிந்து விழுந்து பெரும் சத்தம் ஏற்பட்டுள்ளது. கோயிலுக்கு உள்ளேயும், வெளியிலும் பெருமளவு ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு 1.50 மணிக்கு சுவர் இடிந்து விழுந்ததால் உயிர் சேதம், பொருட்சேதம் பெரிய அளவில் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இடிந்து விழுந்த சுவற்றின் கட்டுமான கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் வருமா? வராதா?.. கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

இதனிடையே, கிழக்கு கோபுரம் இடிந்து விழுந்த சம்பவம்‌ காட்டுத்தீ போல ஶ்ரீரங்கம் பகுதி மக்களிடையே பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, இடிந்து விழுந்த கிழக்கு கோபுர ஒரு‌ பகுதியை முழுவதுமாக புதிதாக கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:சென்னை-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் - மதுரை கோட்ட மேலாளர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details