ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதேசி விழா கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பகல்பத்து வைபவத்தில் உற்சவர் நம்பெருமாள் தினமும் ஒரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.
இன்று (டிச.20) நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாவித்தார்.
பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் தொடர்ந்து உற்சவர் நம்பெருமாள், பாண்டியன் கொண்டை, புஜகீர்த்தி, வைர அபயஹஸ்தம், ரத்தினகிளி மார்பில் லட்சுமி பதக்கம், காசு மாலை, அர்த்தசசந்தின் அலங்காரத்தில் புறப்பட்டு ஏழு மணி முதல் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு ஒன்பது மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
மூலவர் ரங்கநாதப் பெருமாளுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...நம்பெருமாளுக்கு கவிரி மான் தொண்டாரை கொண்டை அலங்காரம்!