தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 5) புதிதாக 5 ஆயிரத்து 175 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரத்து 460ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கரோனாவால் 112 பேர் உயிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயித்து 461ஆக உயர்ந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இருப்பினும், தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. திருச்சியில் இன்று ஒரே நாளில் 136 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.