திருச்சி மாவட்டம் பாலக்கரை அருகேயுள்ள பிரபாத் சந்திப்பில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் அதன் மாவட்ட தலைவர் உதுமான் அலி கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள், உணவு பொட்டலங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "கடந்த 25 ஆண்டுகளாக மக்களுக்காக பல நலத்திட்டங்களை செய்துள்ளோம். இதேபோன்று அனைத்து விதமான இயற்கை சீற்றங்களிலும் அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்துள்ளோம். தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரமாக திருச்சியை அறிவிக்க வேண்டும். திருச்சி காந்தி மார்க்கெட் பிரச்னை தற்போது எழுந்துள்ளது.