திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள விடத்திலாம்பட்டி ஆற்றுப் பகுதிகளில், அதிகாலை நேரங்களில் தொடர்ந்து மணல் கொள்ளை நடப்பதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் காவல் துறையினர் உதவியுடன், வருவாய்த் துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காவல் துறையினரைக் கண்டதும், மணல் அள்ளிய கும்பல் லாரியை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றனர். அப்போது ஆற்றுக்குள் வேகமாகச் சென்ற லாரி நிலைதடுமாறி கவிழ்ந்தது.