தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழைவேண்டி மாரியம்மன் கோயிலில் பூஜை! - Trichy samayapuram maariyamman kovil pooja

திருச்சி: தமிழ்நாட்டில் மழைபெய்ய வேண்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வருண ஜபம், அசுர ஹோமம் யாக பூஜைகள் நடைபெற்றன.

திருச்சி

By

Published : May 8, 2019, 12:25 PM IST

தமிழ்நாட்டில் மழை குறைவாக பெய்துவரும் நிலையில், பருவமழை தவறாமல் பெய்து கோடையிலும் வசந்தம் பெறுவதற்காக முக்கிய கோயில்களில் மழை வேண்டி யாகம் செய்ய இந்து சமய அறநிலையத் துறை ஆணையம் கோயில் இணை ஆணையர்களுக்கு மே 2ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மழைவேண்டி வருண ஜபம், அசுர ஹோமம் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோயில் அர்ச்சகர்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்தச் சிறப்பு யாக பூஜைகள் செய்வதால் அக்னி வெயிலில் வருண பகவான் மழை பொழிந்து விவசாயம் செழித்து மக்களுக்கு நன்மை நடக்கும் என்பது நம்பிக்கையாகும். இந்நிகழ்வை கோயில் இணை ஆணையர் அசோக்குமார், அலுவலக ஊழியர்கள், கோயில் பணியாளர்கள் ஏற்பாடு செய்தனர்.

மழைபெய்ய வேண்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூஜை

ABOUT THE AUTHOR

...view details