திருச்சி அருகே 30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தென் சீரடி சாய்பாபா கோயிலிம் கும்பாபிஷேக விழா வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஸ்ரீ சாய் கற்பக விருக்ஷம் டிரஸ்ட் அறங்காவலரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”திருச்சி மாவட்டம் சமயபுரம் அக்கரைப்பட்டியில் கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி அங்கு உள்ள ஞான பூமி குருஸ்தானத்தில் சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.அதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தென் சீரடி சாய்பாபா கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
பக்தர்களின் நன்கொடைகள் மூலம் படிப்படியாக ரூ. 30 கோடி ரூபாய் செலவில் தற்போது தென் சீரடி பாபா சாய்பாபா கோவில் தயாராகியுள்ளது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் 65 ஆயிரம் சதுர அடி பரப்பில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மகா கும்பாபிஷேகம் ஜனவரி 20ஆம் தேதி காலை 9 மணி முதல் 10:15 மணி வரை நடைபெறுகிறது.