தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி மலைக்கோட்டை உச்சியில் கார்த்திகை மகா தீபம்! - திருச்சி மலைக்கோட்டை

திருச்சி: மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

trichy rockfort deepam
trichy rockfort deepam

By

Published : Dec 10, 2019, 7:58 PM IST

Updated : Dec 10, 2019, 8:55 PM IST

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இந்த மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும் மலையின் நடுப்பகுதியில் தாயுமான சுவாமியும் மட்டுவார் குழலம்மையும் மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகின்றனர்.

இக்கோயிலில் கார்த்திகை மகா தீபத்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.

மலைக்கோட்டை உச்சியில் கார்த்திகை மகா தீபம்

இந்நிலையில், தீப்பந்தம் மலை உச்சிக்கு கொண்டுசெல்லப்பட்டு மாலை 6 மணியளவில் 237 அடி மலை உச்சியில் அமைந்துள்ள உச்சிபிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள சுமார் 30 அடி உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட செப்புக் கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியை திரியாக கொண்டும், 900 லிட்டரில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவைகளை ஊற்றி ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த திரியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மலைக்கோட்டையில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம் தொடர்ந்து மூன்று நாள்கள் அணையாமல் எரியக் கூடியதாகும்.

இதையும் படிங்க:

அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்!

Last Updated : Dec 10, 2019, 8:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details