தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தேர்தலுக்கு பிறகு இப்போ தான் பார்க்கிறோம்" திருச்சி எம்பியை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு!

திருச்சியில் ஓட்டு கேட்க வந்ததற்கு பிறகு இதுவரையிலும் எட்டிப் பார்க்கவில்லை என கூறி பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசுவை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி எம்பியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருச்சி எம்பியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 7:56 PM IST

திருச்சி எம்பியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருச்சி: திருச்சி மாநகராட்சி 29-வது வார்டு ஆழ்வார்தோப்பு பகுதியில் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு 4 வருடத்திற்கு பிறகு வருகை தந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசுவை இஸ்லாமிய மக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.

மக்களுக்கான தேவைகளை கூட கேட்டு நிறைவேற்ற முன் வராமல் ஓட்டு கேட்பதற்கு மட்டும் வந்து விட்டு அதன் பிறகு தொகுதி பக்கம் தலை காட்டாத திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

இங்கே மக்களுக்கு பாதிக்கும் வகையில் இயங்கி வரும் கேஸ் குடோனை உடனடியாக நிரந்திரமாக மூட வேண்டும் என்றும், பீமாநகர் மற்றும் ஆழ்வார் தோப்பு பகுதியை இணைக்கும் பாலம் மிகுந்த சேதமடைந்து உள்ளதால், அதனை சரி செய்யவும், சாக்கடைகளை தூர்வார வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்து உள்ளனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் சரியான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

இதையும் படிங்க:செம்மண் குவாரி வழக்கு; நேரில் ஆஜரான அமைச்சர் பொன்முடி!

எனவே உடனடியாக நாடாளுமன்ற நிதியில் இருந்து இவற்றை புனரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கையை முன் வைத்தனர். முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பி பின்னர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை திருநாவுக்கரசர் சமாதானப்படுத்தினார். அதன் பிறகு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர். பொதுமக்கள் தொடர்ந்து எம்பியை பார்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 4 வருடம் கழித்து நீங்கள் இந்த பகுதிக்கு வருவதாகவும், இதற்கு முன்பு ஓட்டு கேட்பதற்காக தான் வந்ததாக குறிப்பிட்டனர்.

இதையும் படிங்க:தென்காசியில் தொடரும் குடிநீர் பிரச்சனை; குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்!

இதில் டென்ஷனான எம்பி உங்கள் குறைகளை எம்.எல்.ஏ மற்றும் அமைச்சரிடம் போய் கூறுங்கள் இல்லை என்றால் என்னிடம் மனு கொடுங்கள் என்று தெரிவித்தார். இதனால் அப்பகுதி மக்களுக்கும் எம்பி உடன் சென்ற காங்கிரஸ்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

இதையும் படிங்க:"திமுக அரசு மக்களிடம் பிரிவினைவாதத்தை தூண்டுகிறது" - மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details