தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசைக் கண்டித்து ரயில்வே பணிமனை ஊழியர்கள் நூதன போராட்டம் - பொன்மலை ரயில்வே பணிமனை

திருச்சி: தனியார்மயத்தைக் கண்டித்து ரயில்வே பணிமனை ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வே பணிமனை
ரயில்வே பணிமனை

By

Published : Jun 2, 2020, 6:22 PM IST

ரயில்வே உள்ளிட்ட பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக தொழிற்சங்கங்கள் மத்திய அரசின் இந்த அறிவிப்பைக் கண்டித்து போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றன. இந்த வகையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் அனைத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இன்று ( ஜூன் 2) கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.

மேலும் சிலர் கறுப்பு ஆடை, கறுப்பு பேட்ஜ் அணிந்தும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். தனியார்மயத்தைக் கண்டித்து அமைதியான முறையில் ஊழியர்கள் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details