தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நோயாளிகளுக்கு ரயில் பெட்டி வார்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரம் - trichy ponmalai depot busy to produce carona isolation coach ward

திருச்சி: பொன்மலை ரயில்வே பணிமனையில் கரோனா நோயாளிகளுக்கு கட்டில், ரயில் பெட்டி வார்டு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கரோனா நோயாளிகளுக்கு ரயில் பெட்டி வார்டு அமைக்கும் பணிமனை
கரோனா நோயாளிகளுக்கு ரயில் பெட்டி வார்டு அமைக்கும் பணிமனை

By

Published : Apr 2, 2020, 7:20 PM IST

Updated : Apr 3, 2020, 4:16 PM IST

கரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் கரோனா நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை வார்டுகளாக ரயில் பெட்டிகளை மாற்றியமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி அல்லாத ரயில் பெட்டிகளை பிரத்யேக வார்டாக மாற்றும் பணி ரயில்வே பணிமனைகளில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ரயில் பெட்டிகளை பிரத்தியேகமாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணியில் ரயில்வே தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் கரோனா நோயாளிகளுக்கு கட்டில்கள் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக 60 கட்டில்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 10 கட்டில்கள் பொன்மலை ரயில்வே மருத்துவமனைக்கும், 50 கட்டில்கள் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

Last Updated : Apr 3, 2020, 4:16 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details