தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி குழந்தை கடத்தல் வழக்கு; தாய் கைது! நரபலியா என தீவிர விசாரணை

திருச்சியில் குழந்தை கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின் பேரில், கடத்தப்பட்ட குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டார். மேலும், குழந்தையை நரபலிக்காக கடத்தப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 7, 2023, 3:45 PM IST

திருச்சி:லால்குடி அருகே மங்கமாள்புரம் பகுதியைச் சேர்ந்த ஜானகி என்பவரின் பிறந்த 10 நாட்களே ஆன பெண் குழந்தையை கடந்த ஆண்டு செப்.23 ஆம் தேதி குழந்தையை கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த வரும் நிலையில் குழந்தையின் தாய் ஜானகியை லால்குடி போலீசார் கைது செய்து கடத்திய குழந்தை எங்கே உள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வழக்கறிஞர் பிரபு அவர்களின் இரண்டாவது மனைவி சண்முகவள்ளி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

குழந்தையின் தாய்க்கு சிறை:போலீசாரின் விசாரணையில், கடத்தப்பட்ட குழந்தையின் தாய் ஜானகி முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்ததால், கடத்தப்பட்ட குழந்தை 4 மாதங்கள் கடந்தும் மீட்கபடாத நிலையில் குழந்தையின் தாய் ஜானகியை ஐந்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று (ஜன.7) திருச்சி சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின் பேரில், மூன்று ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து வழக்கறிஞர் பிரபு அவரது இரண்டாவது மனைவி சண்முகவள்ளியை போலீசார் தேடி வருகின்றனர். இந்தக் கடத்தல் சம்பவத்தில் குழந்தையை விற்பனைக்காக கடத்தியார்களா? அல்லது நரபலி கொடுப்பதற்காக கடத்தினார்களா? என்பது கொடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் கடத்தப்பட்ட சிறுமியை ஒரு மணி நேரத்தில் மீட்ட காவல்துறை...!

ABOUT THE AUTHOR

...view details