தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் - சிறப்பு டிஐஜி விஜயகுமார்

திருச்சி: நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து தேர்தல் சிறப்பு டிஜிபி திருச்சி காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

திருச்சி போலீஸார் தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

By

Published : Mar 27, 2019, 11:20 PM IST

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

இதனை தொடர்ந்து, வாக்குச் சாவடிகளில், வாக்குப் பதிவு மையங்கள், பதற்றமான வாக்குச்சாவடிகள் ஆகியவை கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்புப் பணிகளை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனைகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், இது தொடர்பா தமிழக தேர்தல் சிறப்பு டிஜிபி விஜயகுமார் இன்று திருச்சி வந்திருந்தார்.அப்போது, திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் காவல் துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய மண்டல ஐ.ஜி வரதராஜன், திருச்சி மாநகர காவல் துறை கமிஷ்னர் அமல்ராஜ், திருச்சி சரக டிஐஜி லட்சுமி, தஞ்சை சரக டிஐஜி லோகநாதன், 12 மாவட்ட எஸ்பி.கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details