தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் ரம்மியால் கடனாளியான காவலர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி: திருப்பராய்த்துறை அருகே ரம்மி விளையாட்டால் பல பேரிடம் கடன் வாங்கி கடனாளியான காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Debtor policeman hanged by rummy commits suicide!
கடன் தொல்லையால் காவலர் தற்கொலை

By

Published : Aug 8, 2020, 12:20 PM IST

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் வாத்தலை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த் (26). திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை பெரியார் நகரைச் சேர்ந்த இவர், ஆன்லைனில் ரம்மி சூதாட்ட விளையாட்டில் வழக்கமாக ஈடுபட்டுவந்தார்.

இதற்காக தன்னுடன் பணிபுரியும் நண்பர்களிடம் அவ்வப்போது கடன் வாங்குவது வழக்கம். அவ்வாறு வாங்கிய கடனை திரும்பி கொடுக்க முடியாததால் மன உளைச்சலில் இருந்துவந்தாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று (ஆக.7) இரவு 9 மணிக்கு பணி முடித்து வீட்டிற்கு சென்ற ஆனந்த், இரவு 11 மணிக்கு மேல் தனது வீட்டுக்கு பின்னால் உள்ள மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இன்று அதிகாலை மூன்று மணிக்கு மாட்டு கொட்டகைக்குச் சென்ற ஆனந்தின் தந்தை கோவிந்தராஜ், தனது மகன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஜீயபுரம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவலர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அவர் ரம்மி விளையாட்டிற்காக அதிக கடன் வாங்கியிருப்பது தெரியவந்தது. இதனால்தான் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறேதும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details