திருச்சியில் இரண்டு ரவுடிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது தப்பிக்க முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அவர்கள் பிடிக்கப்பட்டனர். இந்நிலையில் சம்பவ இடத்தில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்ய பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “சுடப்பட்ட குற்றவாளிகள் இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக இருந்தனர். இந்நிலையில் திருச்சியில் நடந்த ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக அவர்கள் இருவரும் இன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
விசாரணைக்காக கைது செய்து குற்றவாளிகளை காவல் துறையினர் அழைத்துச் செல்லும்போது, காவல் துறையினரைத் தாக்கியதால் தற்காப்புக்காக காவலர்கள் குற்றவாளிகளை சுட்டு பிடித்தனர். காவலர்களை தாக்கி தப்பிக்க முயற்சிக்கும் குற்றவாளிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.