திருச்சி: தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜன. 15) மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரியசூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். காலை 8.00 மணியளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளிச்சென்றனர்.