தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூரியூர் ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு - திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சூரியூர் ஜல்லிக்கட்டு
சூரியூர் ஜல்லிக்கட்டு

By

Published : Jan 15, 2022, 12:46 PM IST

Updated : Jan 15, 2022, 5:38 PM IST

திருச்சி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சூரியூர் ஜல்லிக்கட்டு

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காளைகள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை, போட்டியில் பங்கேற்பவர்கள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கலன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்து தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்களும், 400 காளைகளும் பங்கேற்றுள்ளது.

சூரியூர் ஜல்லிக்கட்டு

போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர்களுக்கு கரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், போட்டி தொடங்கும் முன்பாகவே அனைவருக்கும் தெர்மல் கேனர் மூலம் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

சூரியூர் ஜல்லிக்கட்டு

போட்டியில் கலந்து கொள்ளக் கூடிய காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான அனுமதிச்சீட்டுடன் ஒரே நபர் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். போட்டியை முன்னிட்டு காளை வெளியேறக்கூடிய வாடிவாசல் பகுதிக்கு முன்பாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பாதுகாப்பு கருதி தென்னை நார்கள் பரப்பிவிடப்பட்டுள்ளன. போட்டி நடைபெறும் பகுதியில் இருபுறமும் பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சூரியூர் ஜல்லிக்கட்டு

போட்டியில் அனுமதிக்கப்பட்ட 150 பார்வையாளர்களைக் கடந்து பார்வையாளர் உள்ளே செல்வதைத் தவிர்க்கும் வகையில் திருவெறும்பூர் பகுதியில் 10 இடங்களில் காவல்துறையினர் தடுப்பு அமைத்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சூரியூர் ஜல்லிக்கட்டு

போட்டியில் காளைகளை அடக்கும் சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு மிக்ஸி, கிரைண்டர் ,குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு சுற்றிலும் தலா 30 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படுவர், ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாகப் போட்டி நடைபெறும். ஜல்லிக்கட்டு போட்டியை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் மாட்டைப் பிடித்து வந்த ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் வயது (30 ) மாடு முட்டி படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையும் படிங்க: கோவையில் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் கரோனா; மீண்டும் ஊரடங்கா?

Last Updated : Jan 15, 2022, 5:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details